திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம்: 7 மணி நேர காத்திருப்பு

516பார்த்தது
திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம்: 7 மணி நேர காத்திருப்பு
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜைகள் நிறைவு பெற்றன. வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையிலிருந்தே குவிந்த பக்தர்கள், கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி, சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை மற்றும் ஊருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி