திருச்செந்தூரில், கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மூலவர், சண்முகர் உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்த அவர், பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.