கோவிலில் நடன வீடியோ – இளம்பெண் மீது ஆன்லைன் புகார்

2பார்த்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்புள்ள சண்முக விலாச மண்டபத்தில் திரைப்பட பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளம்பெண் ரியா மீது நடவடிக்கை எடுக்க கோவில் நிர்வாகம் ஆன்லைன் புகார் அளித்துள்ளது. கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அளித்த புகாரில், இந்த நடனம் கோயிலின் புனிதத் தன்மையை புண்படுத்தி பக்தர்களின் மத உணர்வை காயப்படுத்தியுள்ளது என்றும், கோவில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடப்பது தொடர்ந்து அதிகரிக்காமல் இருக்க, வீடியோவை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கவும், சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவும் கோவில் நிர்வாகம் கோரியுள்ளது.