தூத்துக்குடி: மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது

84பார்த்தது
தூத்துக்குடி: மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது
தூத்துக்குடியில் மது போதையில் டார்ச்சர் செய்த கணவனை உருட்டுகட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ரவீந்திரன் (55), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாலம்மாள் (53), இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். 

இதற்கிடையே ரவீந்திரன் தினசரி மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவி பாலம்மாளிடம் தகராறு செய்வாராம். மேலும் அவருக்கு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று மதியம் மதுபோதையில் வந்த ரவீந்திரன் மனைவியிடம் டார்ச்சர் செய்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி பாலம்மாள் வீட்டில் இருந்த உருட்டுகட்டையால் அவரை சரமாரியாக தாக்கினாராம்.

 இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து பாலம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.