திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கர்ப்பிணிப் பெண் என்பதையும் பொருட்படுத்தாமல் தம்பதியரை வெளியே தள்ளி கேட்டைப் பூட்டியதாக கோவில் ஊழியர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட தம்பதியினர், விஐபி முன்னுரிமை மற்றும் கட்டண முறைகேடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.