காயல்பட்டணத்தில் குடும்பத் தகராறு காரணமாக கருப்பசாமி (35) என்பவர் மனமுடைந்து உயிரிழந்தார். மது அருந்தும் பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு தனி அறைக்குச் சென்ற அவர், இன்று காலை தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார். தகவலறிந்த போலீஸார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.