மீன் வரத்து குறைவு – தூத்துக்குடியில் மீன் விலை கடும் உயர்வு

273பார்த்தது
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு துறைமுகத்தில் பலத்த காற்று மற்றும் மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்களின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், சீலா மீன் கிலோ ₹1300 வரையிலும், பிற ரக மீன்கள் ₹200 முதல் ₹750 வரையிலும், குறுவளை ₹500 வரையிலும், சாலைமீன் ஒரு கூடை ₹2500 வரையிலும் விற்பனையாகிறது. வரத்து குறைவாக இருந்தாலும், கிடைத்த நல்ல விலையால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக விலையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன் வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி