கனமழை: திருச்செந்தூர் சிவன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

3பார்த்தது
கனமழை: திருச்செந்தூர் சிவன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆலந்தலை, பரமன்குறிச்சி, தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், திருச்செந்தூர் சிவன் கோவிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. மெஞ்ஞானபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது.

தொடர்புடைய செய்தி