மதிமுக துரை வைகோ எம்பி பேட்டி

0பார்த்தது
மதிமுக துரை வைகோ எம்பி பேட்டி
கோவில்பட்டியில் மதிமுக முதன்மை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை மதிமுக வரவேற்பதாகவும், இது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் பிரதானப் போட்டி நிலவுகிறது என்றும் அவர் கூறினார். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, வேட்பாளர்கள் யார் என்பது குறித்து பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கும் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே அறிவிக்கப்படும் என்றும், மாநிலங்களவைத் தேர்தல் போட்டி குறித்து கட்சியின் தலைமை இறுதி முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி