திருச்செந்தூரில் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டவர் பாலமுருகன் (48) என போலீசார் உறுதி செய்துள்ளனர். கட்டடத் தொழிலாளியான இவர், பிப்ரவரி 27ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு வந்தபோது காரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது மாயமானார். டி. பி. ரோடு வாய்க்கால் பாலம் அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.