ஆத்தூர் அருகே 2 ஆடுகள் திருடியவர் கைது

2பார்த்தது
ஆத்தூர் அருகே 2 ஆடுகள் திருடியவர் கைது
மேலஆத்தூர், குச்சிக்காட்டைச் சேர்ந்த செல்வி (64) என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த 5 ஆடுகளில் 2 ஆடுகளை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திருடிச் சென்றனர். இதுகுறித்து புகாரளித்த நிலையில், ஆத்தூர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், மேல ஆத்தூர் கண்ணானி தெருவைச் சேர்ந்த பார்த்திபன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட 2 ஆடுகள் மீட்கப்பட்டன. தலைமறைவான நரசன்விளையைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி