தூத்துக்குடி: மனு கொடுக்க வந்த பெண்ணிடம் ₹5,000 வசூலித்த இடைத்தரகர் கைது

326பார்த்தது
தூத்துக்குடி: மனு கொடுக்க வந்த பெண்ணிடம் ₹5,000 வசூலித்த இடைத்தரகர் கைது
தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பெண்ணிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற இடைத்தரகர் வின்சென்ட் (49) கைது செய்யப்பட்டார். பெண்ணுடன் வந்த நபரின் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டால் எஸ்பி ஆல்பர்ட்ஜான் விசாரணை நடத்தினார். அதில், பிரச்சினை தீர்த்து வைப்பதாகக் கூறி பணம் பெற்றது தெரியவந்தது. சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து வின்சென்டை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி