திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில்
திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருச்செந்தூர் பகுதியில் சிலம்பம் பயிற்சி மாணவர்கள் அவருக்கு சிலம்பம் ஆடி வரவேற்பு அளித்தனர். அப்போது அனிதா ராதாகிருஷ்ணனும் அவர்களுடன் இணைந்து சிலம்பம் ஆடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.