அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்த நாஞ்சில் சம்பத்

325பார்த்தது
திருச்செந்தூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் (TVK) மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில், கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “அடுத்த முதலமைச்சர் விஜய் தான்” என அவர் கூறியதுடன், திமுக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சீமான், கமலஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், இளைஞர் பிரச்சனைகள் மற்றும் நிர்வாக தோல்விகளை சுட்டிக்காட்டியும் அவர் பேசினார். இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான TVK நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி