திருச்செந்தூர்: மீண்டும் லாட்டரி; அனிதா ராதாகிருஷ்ணன்

711பார்த்தது
திருச்செந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், புதிய அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி தொழிலைக் கொண்டு வர நினைக்கிறார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் நடந்த தவறுகள் மற்றும் பின்னடைவுகள் குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் அமைத்துள்ள கள ஆய்வுக் குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.