திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் அரசு பேருந்து பணிமனையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களாகியும் தண்ணீர் அகற்றப்படாத நிலையில், வீரபாண்டிய பட்டனம் ஊராட்சி நிர்வாகம், 50 லட்சத்திற்கும் மேலான தொழில் வரி பாக்கியை பணிமனை வைத்துள்ளதாகக் கூறியுள்ளது. 2018 முதல் ஏழு ஆண்டுகளாக தொழில் வரி செலுத்தாததால், பணியாளர்களைக் கொண்டு தண்ணீரை அகற்றவில்லை என்றும், ஆனால் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி வருவதாகவும் ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.