எலக்ட்ரிக் வாகனம் வழங்க மறுப்பு: நஷ்டஈடு வழங்க உத்தரவு

2பார்த்தது
எலக்ட்ரிக் வாகனம் வழங்க மறுப்பு: நஷ்டஈடு வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த அருண்சக்திவேல், திருச்செந்தூரில் உள்ள ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவனத்திடம் ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்து 235 செலுத்தி இரு சக்கர வாகனம் வாங்கினார். 10 நாட்களுக்குள் டெலிவரி செய்வதாகக் கூறிய நிறுவனம் மூன்று மாதங்கள் கழித்து வாகனம் வேறு ஒருவரின் பெயரில் வந்துள்ளதாகக் கூறியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருண்சக்திவேல் தொடர்ந்த வழக்கில், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், செலுத்திய முழுத் தொகை, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கான நஷ்ட ஈடு, வழக்கு செலவு என மொத்தம் ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 235-ஐ ஆறு வார காலத்துக்குள் வழங்க உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி