தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணி ஆற்றில் நீரில் மூழ்கி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அபிநயா(16), மீனாட்சி (12) ஆகிய இரு சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த ஏரல் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.