ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஜன. 1) புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன. புத்தாண்டையொட்டி, திருச்செந்தூர் கோயிலுக்கு சில நாள்களாகவே தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த விரதமிருந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்துள்ளனர்.