தரைப்பாலத்தை ஒட்டிய தார் சாலை மழைவெள்ளத்தில் சேதம்

2பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால், ஆத்தூர்-குரும்பூர் சாலையில் உள்ள வெள்ளக்கோயில் பகுதியில் தார்ச்சாலை அடித்துச்செல்லப்பட்டது. தரைப்பாலத்தை அமலைச்செடிகள் அடைத்ததால் மழைநீர் தார்ச்சாலையை பெயர்த்துக்கொண்டு பாய்ந்தது. இதனால் ஆத்தூர்-குரும்பூர் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, வெள்ளக்கோயில், சுகந்தலை உள்ளிட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியே செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். வாய்க்கால்களில் அடைப்புகள் அகற்றப்படாததால் அதிகாரிகள் அலட்சியமே சாலை சேதமடைந்ததற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மணல் கொண்டு சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி