கடல் உள்வாங்கியதால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

8பார்த்தது
கடல் உள்வாங்கியதால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் நேற்று பவுர்ணமி தினத்தை ஒட்டி கடல் சுமார் 60 அடி உள்வாங்கியது. இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இன்று 2-வது நாளாக நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளம் வரை கரையில் இருந்து கடல் 80 அடி உள்வாங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் குளிக்க சிரமம் அடைந்துள்ளனர். ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுக்கின்றனர். காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி