தூத்துக்குடி விமான நிலையத்தில் பேசிய எம்பி கனிமொழி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், பிரதமரே பேச தயங்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் விமர்சித்தார். அமெரிக்காவுடன் செய்யப்பட்டதாக கூறப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பும் பொருட்களுக்கு 0% வரி, இந்தியா அமெரிக்காவுக்கு அனுப்பும் பொருட்களுக்கு 18% வரி விதிப்பது நியாயமற்றது என்றும் கூறினார்.