தூத்துக்குடி: பக்ரீத் சிறப்பு தொழுகை – ஆயிரங்கள் பங்கேற்பு

330பார்த்தது
தூத்துக்குடி: பக்ரீத் சிறப்பு தொழுகை – ஆயிரங்கள் பங்கேற்பு
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைமை இமாம் அப்துல் அலிம் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உலக அமைதி, அன்பு, சகோதரத்துவம் மற்றும் தியாகம் நிலைக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அனைவரும் பக்ரீத் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு, வீடுகளில் குர்பானி செய்து ஏழைகளுக்கு இறைச்சி வழங்கினர். இந்த நிகழ்வில் அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி