திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கு சண்முக விலாச மண்டப இரும்பு கேட் வழியாக இன்று (மே 17) அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் ஆவேசமடைந்தனர். கோயில் நிர்வாக ஊழியர்கள், அர்ச்சகர்கள் பணம் வாங்கிக்கொண்டு சிலரை அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பக்தர்கள் இரும்பு கேட்டை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தனர். இந்த சம்பவத்தால் கோயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.