திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா: சுவாமி வீதி உலா

1பார்த்தது
திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா: சுவாமி வீதி உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவின் 7-ஆம் நாளில், சண்முகப் பெருமான் சிகப்பு சாத்தி அலங்காரத்தில் தங்கச் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி மற்றும் அம்மன் வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை விஸ்வரூப தீபாராதனை, உருகுசட்ட சேவை, சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 3-ஆம் தேதி தெப்பத் திருவிழா, 12-ஆம் நாள் மஞ்சள் நீராட்டு நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.

தொடர்புடைய செய்தி