இந்திய அஞ்சல் துறை, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நினைவுகூரும் வகையில் சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரைகளை வெளியிட்டு வருகிறது. அறுபடை வீடுகளில் மீதமுள்ள 5 முருகன் கோயில்களுக்கு அஞ்சல் முத்திரைகள் நேற்று வெளியிடப்பட்டன. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கான முத்திரை வைகாசி விசாக தினத்தில் திருச்செந்தூர் தலைமை தபால் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.