நெல்லை ரயில் நிலையத்தில் பிட்லைன் புதுப்பிக்கும் பணிகள் காரணமாக ஏப்ரல் 18 வரை நெல்லை திருச்செந்தூர் இடையே ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் புதுப்பிக்கும் பணி ஏப்ரல் 18ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே நெல்லை திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்பட்ட 2 ரயில்களும் ஏப்ரல் 18ம் தேதி வரை மேலும் 5 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
தென்னக ரயில்வேயின் அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 20ந் தேதி முதல் ஏப்ரல் 13ந் தேதி வரை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக நெல்லை திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. அதன்படி, திருச்செந்தூரில் இருந்து காலை 10:10 மணிக்கு நெல்லை செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 56004 மற்றும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 56003 ஆகிய 2 ரயில்களும் கடந்த 25 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் தற்போது பணி நிறைவடையாத காரணத்தால் 18.04.2025 அன்று மாலை 6.00 மணி வரையில் மேலும் 5 நாட்கள் இந்த 2 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என தென்னக ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.