திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் நடைபெற்ற மாசித் திருவிழா பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. விழா காலங்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. காலை 7:30 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வெளிவீதிகளிலும் பவனி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் 'ஓம் சக்தி' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.