திருச்செந்தூர் வளாகத்தில் பாதாள சாக்கடை; பக்தர்கள் அவதி

0பார்த்தது
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மேற்கு கோபுர நுழைவாயில் பகுதியில் பாதாள சாக்கடை நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் சாலை முழுவதும் கழிவுநீர் பரவி, கடைகளுக்குச் செல்லவும், பொருட்கள் வாங்கவும் சிரமம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதைச் சரிசெய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி