திருச்செந்தூர் கோயிலில் வைகாசி வசந்த திருவிழா;

300பார்த்தது
திருச்செந்தூர் கோயிலில் வைகாசி வசந்த திருவிழா;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 10 நாள் ‘வைகாசி வசந்த திருவிழா’ மே 21 அன்று தொடங்கியது. முதல் நாளில் விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, இரவில் தங்க ரதத்தில் கிரிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழா மே 29 வரை தினமும் நடைபெறும், வைகாசி விசாகம் மே 30 அன்று நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி