திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், மழை காரணமாக தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பக்தர்கள் வாகனங்களை இடையூறு இன்றி நிறுத்தி சாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிவிப்பு பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.