தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் அருகே நெடுங்கரை மேலத் தெருவைச் சேர்ந்த புனிதா(60) என்பவர், சேதுசுப்பிரமணியபுரத்தில் காய்கனி வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் வழி கேட்பதுபோல் நடித்து, அவர் அணிந்திருந்த 2 கிராம் தங்கக் கம்மலைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து புனிதா அளித்த புகாரின் பேரில் குரும்பூா் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.