ஜி. பி. முத்துவை கைது செய்ய வேண்டும்; பெண்கள் எஸ்பி யிடம் மனு

2பார்த்தது
தூத்துக்குடி உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டதாக நடிகர்-யூடியூப்பர் ஜி. பி. முத்து மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட தகராறில், முத்து மகேஷ் மனைவி பாலஅமுதாவை தாக்கியதாக ஜி. பி. முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஜி. பி. முத்து சமூக வலைதளங்களில் பெண்களை அவதூறு செய்து, காவல்துறை தன்னை கைது செய்ய முடியாது என கருத்துக்கள் வெளியிடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மகேஷ் குடும்பத்தினர் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து, ஜி. பி. முத்து மற்றும் அவரது உறவினர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி