ஆத்தூர் அருகே பைக் விபத்தில் காயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், தென் திருப்பேரையைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு மகன் செல்வ சிவா (20). இவர் நேற்று தென் திருப்பேரை - ஆத்தூர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்றபோது பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.