தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் ஆகியோர் ரத்த தானம் செய்தனர்.
தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் இன்று(செப்.23) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மற்றும் ரத்த தானம் குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூறு இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் ஆகியோர் ரத்த தானம் செய்தனர்.
இந்த ரத்த தான முகாமை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் துவக்கி வைத்தார். இதில் பெறப்படும் நூறு யூனிட் ரத்தம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.