தூத்துக்குடி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மிதமான மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை 6.30 மணி நிலவரப்படி, மாவட்டம் முழுவதும் சராசரியாக 196.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை காரணமாக, 19 ஆம் தேதி வரை கனமழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.