10 வார்டுகளில் விரைவில் 24 மணி நேர குடிநீர் விநியோகம்

352பார்த்தது
10 வார்டுகளில் விரைவில் 24 மணி நேர குடிநீர் விநியோகம்
தூத்துக்குடி மாநகரில் உள்ள 10 வார்டுகளுக்கு இன்னும் சில தினங்களில் 24 மணி நேரமும் தொடர்ச்சியான குடிநீர் விநியோகம் துவங்கும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். வல்லநாடு அகரம் பகுதியில் ரூ. 20 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட குடிநீர்த் திட்ட பணிகளை ஆய்வு செய்த அவர், தற்போது பெரும்பாலான பகுதிகளில் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக 10 வார்டுகளில் இந்த சேவை தொடங்கி, அடுத்த சில மாதங்களில் அனைத்து வார்டுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி