மத்திய பாஜக அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் சிஐடியு, ஏஐடிசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்ய கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 250 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.