தூத்துக்குடியில் நேற்று இரவு, அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராகுல் ஜெபஸ்டியன், சாரூபன், முகிலன் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சரண் மற்றும் கிருத்திக்குமார் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்பாகம் காவல் நிலைய போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.