தூத்துக்குடி தென்பாகம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரோச் பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்களது மோட்டார் சைக்கிளில் அரிவாள் இருந்ததைக் கண்ட போலீசார் அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த டார்ஜன் (26), சலேத் (24) மற்றும் எஸ். அரவிந்த் (24) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.