தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் என்ற வெள்ளையன் (24). இவர் சம்பவத்தன்று அங்குள்ள ஓட்டல் அருகே நின்றுகொண்டிருந்தபோது, 3 பேர் மதுபோதையில் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இதில், தூத்துக்குடி திரு.வி.க நகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மதன்குமார் (23), 3வது மைல் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் மாலைக்கனி (23) கண்ணன் மகன் சிவா (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.