நேதாஜிநகரில் இளைஞரிடம் செயின் பறிக்க முயன்ற 3 பேர் கைது.

97பார்த்தது
நேதாஜிநகரில் இளைஞரிடம் செயின் பறிக்க முயன்ற 3 பேர் கைது.
தூத்துக்குடி நேதாஜிநகர் பகுதியில் இளைஞரிடம் தங்கச் செயினை பறிக்க முயன்ற மர்மநபர்கள், செல்போனை பறித்துச் சென்று தப்பி ஓடினர். சிப்காட் காவல் நிலைய போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு, மீளவிட்டான் காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஓடிய ஜெயஆனந்த் (21), ஜான்சன் (24), சண்முகவேல் (19) ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி