தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியில் சொத்து தகராறு காரணமாக உறவினரை கொலை செய்ய முயன்ற வழக்கில் செந்தூரப்பாண்டி, உத்தமி மற்றும் சுரேஷ் ஆகிய மூவர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.