சாலையில் சுற்றித்திரிந்து 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு!

6பார்த்தது
சாலையில் சுற்றித்திரிந்து 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு!
தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகளில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாநகராட்சி மேயர் ஜெகன், கமிஷனர் பிரியங்கா உத்தரவின்படி, நல அலுவலர் சரோஜா மேற்பார்வையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையிலான அதிகாரிகள், எட்டயபுரம் ரோடு, பாளையங்கோட்டை ரோடு, திருச்செந்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 36 மாடுகளை நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி