ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யவும், போலி மருந்துகள் மற்றும் கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படும் மாத்திரைகளைத் தடுக்கவும் வலியுறுத்தி அகில இந்திய மருந்தகங்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் நாடு முழுவதும் கடையடைப்பு
போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், அம்மா மருந்தகம் மற்றும் சில தனியார் கார்ப்பரேட் மருந்தகங்கள் திறந்திருந்தன.