4ம்கேட்டில் விபத்து; கடுமையான போக்குவரத்து பாதிப்பு

312பார்த்தது
தூத்துக்குடி 4ம் ரயில்வே கேட் பகுதியில் சரக்கு வாகனம் கேட் மீது மோதியதால் கேட் பழுதடைந்தது. இதனால் கேட்டை திறக்க முடியாமல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. நகரம் முழுவதும் கடும் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். போலீசார் போக்குவரத்தை சீர்செய்ய முயன்றனர். கேட்டை சரி செய்ய ரயில்வே ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி