“அமைச்சர் பெயர் சொல்லி ஆக்கிரமிப்பு? மக்கள் கேள்வி! ”

268பார்த்தது
தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியில் அரசு நிலத்தில் பல தலைமுறைகளாக வசித்து வந்த மக்களை முன்பு வெளியேற்றிய கும்பல், தற்போது மீண்டும் பொதுப்பாதையை அடைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை பொதுப்பாதையை தடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தாலும், சிலர் அமைச்சர் பெயரை பயன்படுத்தி அச்சுறுத்தி பாதையை மூட முயன்றுள்ளனர். இதனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறு ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சம் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதனால், போலி பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி