தூத்துக்குடியில் நேற்று (11. 11. 2025) நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ். பி. சண்முகநாதன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் அதிமுக முகவர்கள் அரசு அலுவலர்களுடன் இணைந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும், தகுதியுடையோர் பெயர் சேர்க்கப்படவும், இறப்பு, இரட்டை பதிவு, இடம்பெயர்ந்தோர் பெயர் நீக்கப்படவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவது அதிமுகவின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பல மாவட்ட நிர்வாகிகள், கழகப் பொறுப்பாளர்கள், வட்டச் செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், வழக்கறிஞர்கள், மகளிர் அணியினர் மற்றும் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் பலர் கலந்துகொண்டனர்.