தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. யாகசாலை பூஜைக்குப் பின்பு கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருத்தேரோட்டம் வரும் 13ஆம் தேதியும், திருக்கல்யாண வைபவம் வரும் அக்டோபர் 15ஆம் தேதியும் நடைபெறுகிறது.