தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆலோசனைக் குழுவின் தலைவரான கனிமொழி எம். பி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சண்முகையா எம். எல். ஏ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மதன், மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா மற்றும் விமான நிலைய இயக்குநர் அனூப் ஆகியோர் கலந்துகொண்டனர். விமான நிலைய மேம்பாடு குறித்த ஆலோசனைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.